தமிழ் இலக்கிய மன்றம்

நம் கல்லூரியில் தாய் மொழியின் பெருமையையும் தமிழின் பாரம்பரியமும் தமிழன் கலாச்சாரமும் மேலும் அறிவு சார்ந்த எண்ணங்களையும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பதுதான் இந்த தமிழ் மன்றத்தின் நோக்கம் ஆகும்.

25.02. 2022 அன்று தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக பட்டிமன்றம்,பேச்சு ,கட்டுரை ,வினாடி வினா மற்றும் கவிதை என பல்வேறு போட்டி நடைபெற்றது. அதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டார்கள் .போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியரும் சிறந்த முறையில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர்.

சிறப்பு விருந்தினராக நமது கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.அன்புச்செழியன் அவர்கள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினர்.  மேலும் டாக்டர் ஓ. சரவணன் மற்றும் டாக்டர் எஸ்.சுபாஷினி அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு வகித்தனர் .தமிழ் இலக்கிய மன்ற விழா தலைவர் திரு.குமார் மற்றும் துணைத் தலைவர் திரு. ரஞ்சித் குமார் அவர்களும் இவ்விழாவிற்கு வந்த அனைத்து பேராசிரியர்களையும், மாணவர்களையும் வரவேற்று இவ்விழாவினை சீரும் சிறப்புமாக நடத்தி கொடுத்தார்கள்.